pengal.

pengal.

Get In Touch

வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க சுகர் சர்ருன்னு குறையும்…

வெந்தயம் வெந்தயம் பசை போன்று வழுவழுப்பாக இருக்கும்.இதன் சுவை கசப்புத்தனை கொண்டது என்பதால் இதை தனித்து எடுப்பதில்லை. தாளிப்பு பொருள்களுடன் சேர்த்து தான் சாப்பிடுகிறோம். ஒரு டீஸ்பூன் வெந்தயத்தில் இருக்கும் சத்துக்கள் நார்ச்சத்து 3 கிராம், புரதம் – 3 கிராம் கார்ப்ஸ் – 6 கிராம் கொழுப்பு -1 கிராம் இரும்புச்சத்து -3.72 மைகிராம் மாங்கனீசு -0.137 மைகிராம் மெக்னீசியம் -21.2 மைகிராம் வெந்தயம் சாப்பிடுவதால் சுகர் குறையுமா? ஆய்வு சொல்வது என்ன? வெந்தயம் சாப்பிடுவதால் அது வளர்சிதை மாற்ற நோய்கள் அபாயத்தைக் குறைக்கின்றன என்கிறது ஆய்வுகள் அதில் நீரிழிவு என்னும் டயாபட்டீஸ் ஒன்று. https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC8344183/ வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் டைப் 2டயாபட்டீஸ் நோயாளிகள் 5 கிராம் வெந்தய விதை பொடியை நாள் ஒன்றுக்கு 2 முறை சாப்பிட்டுவந்த நிலையில் 2 மாதங்களில் அவர்களின் இரத்த சர்க்கரை அளவு குறைந்தது தெரியவந்தது. மேலும் எடை அதிகரிப்பு, அடிவயிறு கொழுப்பு, மூன்றுமாத […]

வெந்தயம்

வெந்தயம் பசை போன்று வழுவழுப்பாக இருக்கும்.இதன் சுவை கசப்புத்தனை கொண்டது என்பதால் இதை தனித்து எடுப்பதில்லை. தாளிப்பு பொருள்களுடன் சேர்த்து தான் சாப்பிடுகிறோம்.

ஒரு டீஸ்பூன் வெந்தயத்தில் இருக்கும் சத்துக்கள்

நார்ச்சத்து 3 கிராம்,
புரதம் – 3 கிராம்
கார்ப்ஸ் – 6 கிராம்
கொழுப்பு -1 கிராம்
இரும்புச்சத்து -3.72 மைகிராம்
மாங்கனீசு -0.137 மைகிராம்
மெக்னீசியம் -21.2 மைகிராம்

வெந்தயம் சாப்பிடுவதால் சுகர் குறையுமா? ஆய்வு சொல்வது என்ன?

வெந்தயம் சாப்பிடுவதால் அது வளர்சிதை மாற்ற நோய்கள் அபாயத்தைக் குறைக்கின்றன என்கிறது ஆய்வுகள் அதில் நீரிழிவு என்னும் டயாபட்டீஸ் ஒன்று.

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC8344183/ வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் டைப் 2டயாபட்டீஸ் நோயாளிகள் 5 கிராம் வெந்தய விதை பொடியை நாள் ஒன்றுக்கு 2 முறை சாப்பிட்டுவந்த நிலையில் 2 மாதங்களில் அவர்களின் இரத்த சர்க்கரை அளவு குறைந்தது தெரியவந்தது. மேலும் எடை அதிகரிப்பு, அடிவயிறு கொழுப்பு, மூன்றுமாத இரத்த சர்க்கரை அளாவு குறைந்ததும் கண்டறியப்பட்டது. காரணம் இதில் இருக்கும் உயர்ந்த நார்ச்சத்து உள்ளடக்கம். இதனால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கிறது. நீரிழிவு அல்லாதவர்களுக்கும் இது நல்லது.

மேலும் ஆராய்ச்சியாளர்கள் நீரிழிவு நோய் அல்லாதவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவில் 10% வெந்தயப்பொடியை பயன்படுத்தியபோது, உணவுக்கு பிந்தைய இரத்த சர்க்கரை அளவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

நீரிழிவு குறைய வெந்தயம் எப்படி சாப்பிடுவது?

முதல்நாள் இரவு வெந்தயம் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஊறவைத்து மறூநாள் காலை அந்த நீருடன் வெந்தயம் சேர்த்துமென்று சாப்பிடலாம்.

வெந்தயத்தை லேசாக வறுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு வாயில் போட்டு சாப்பிட்டு வெந்நீர் குடிக்கலாம். மாலையில் இதே போன்று எடுத்துகொள்ளலாம்.

இரவு முழுவதும் ஊறவைத்த வெந்தயத்தை மறுநாள் காலையில் முளைகட்டி அடுத்தநாள் காலை ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிடலாம். இது கசப்பு இருக்காது. சமீபத்திய அறிக்கைகள் வெந்தயத்தை முளைக்கவைத்து சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரையை குறைக்கும் செயல்பாட்டை பல மடங்கு அதிகரிப்பதாக நீரிழிவு நோயை நிர்வகிக்க திறம்பட செயல்படுவதாக https://ijpsr.com/bft-article/germination-of-fenugreek-seeds-improves-hypoglycaemic-effects-and-normalizes-insulin-signilling-pathway-efficiently-in-diabetes/ சர்வதேச மருந்து அறிவியல் மற்றும் ஆராய்ச்சி இதழ் தெரிவித்துள்ளது.

வெந்தயத்தை ஊறவைத்து தண்ணீரை கொதிக்கவைத்து வடிகட்டி அதில் எலுமிச்சை, தேன் கலந்து குடித்துவந்தால் எடை கட்டுக்குப்படும்.

எச்சரிக்கை: வெந்தயம் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யக்கூடியது. ஆனால் இது நீரிழிவு மருந்துகளுக்கு அல்லது மற்ற உடல்நல பிரச்னைகளுக்கு மாற்றானது என்பதை எந்த ஆய்வுகளும் உறுதிசெய்யவில்லை. உணவில் வெந்தயம் சேர்க்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் வெந்தயம் சேர்ப்பதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகி உறுதி செய்துகொள்ளுங்கள்.

pengal
Author

pengal